ரூமேனியா நாட்டில் நடைபெற்ற ஸ்னுக்கர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
ருமேனியா நாட்டின் புகாரெஸ்ட் நகரில் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன.இந்திய அணிக்காக பங்கேற்ற தமிழக வீராங்கனை அனுபமா ராமச்சந்திரன் வெள்ளிப் பதக்கம் என்று சாதனை படைத்தார். இந்த நிலையில் நாடு திரும்பிய அனுபமாக்கு சென்னை விமான நிலையத்தில் அவரின் பெற்றோர்கள்,விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுபமா கூறுகையில்,
ருமேனியா நாட்டில் நடைபெற்ற ஸ்னுக்கர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் என்று உள்ளேன். அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் தாய்லாந்து நாட்டுடன் விளையாடினேன். அவர்களுடன் விளையாடியது மிகவும் கடினமாக இருந்தது. தனியார் பயிற்சி மையத்தில் தொடர்ந்து பயிற்சி பெற்றதால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவது சுலபமாக இருந்தது. தற்போது உள்ள காலகட்டத்தில் ஸ்னுக்கர் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு கல்வி மற்றும் வேலைகளில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. வரும் காலத்தில் கூடுதல் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது எனவே அதிகப்படியான ஸ்னுக்கர் விளையாட்டை தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும். தமிழக அரசு விளையாட்டு,மேம்பாட்டு ஆணையும் அனைத்து உதவிகளும் செய்து வருகிறது.இன்னும் அதிகமான ஊக்கமும்,உதவியும் செய்தால் ஸ்னுக்கர் விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும் இவ்வாறு கூறினார்.
அனுபமா பயிற்சியாளர் சலீம் கூறுகையில்,
இது அனுபமாவின் ஆரம்ப கட்டம் தான் இன்னும் வரும் காலங்களில் அவர் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வெல்வார்.அவருக்கு பெற்றோர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.இந்த முறை தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டியது ஆனால் அடுத்த முறை கண்டிப்பாக தங்க பதக்கம் வெல்வார் இவ்வாறு கூறினார்.