• Wed. Mar 19th, 2025

தமிழக பத்திரிகையாளர் சங்கம் ஆலோசனைக் கூட்டம்

ByKalamegam Viswanathan

Mar 2, 2025

தமிழக பத்திரிகையாளர் சங்க மதுரை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

தமிழக பத்திரிகையாளர் சங்க இரண்டாம் ஆண்டு மாநில மாநாடு மற்றும் மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வெற்றிவேல் மண்டபத்தில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட இணைத் தலைவர் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மோகன் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட செயலாளர் கதிரேசன் வரவேற்புரை கூறினார்.

கூட்டத்திற்கு மூத்த நிர்வாகிகள் கூடலிங்கம் பெருமாள், இரத்தின வேல்,சதிஷ், பாலா , பிரகாஷ், சுரேஷ், வினோத், மணி, உதயகுமார், காளிமுத்து, மாசாணம், பாலா, காளமேகம், மணிகண்டன், டெக்கான் பிரேம்குமார், தங்க சுரேஷ், சுரேஷ் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டோ கலந்து கொண்டனர்.

தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் ஹரிகரன் மாநில அமைப்பு செயலாளர் சென்றாயன், மாநில அமைப்பாளர் கோவிந்தராஜன், மதுரை மண்டல தலைவர் சண்முகம், தென்மண்டல தலைவர் பாலகிருஷ்ணன், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சரவணன், மாநில முதன்மை செய்தி தொடர்பாளர் ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  1. மாவட்ட அளவிலான கூட்டத்தை மாதம் தோறும் நடத்துவது என்றும்,
  2. குமுதம் டிவி செய்தியாளர் அமல்ராஜ் நடிகர் விஜயின் பவுன்சர்களால் தாக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  3. செய்தி சேகரிப்பு பணியின் போது செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடைபெற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

4.மாவட்ட அளவில் செய்தியாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல் குறித்து உடனடியாக மாநில நிர்வாகிகளுக்கு பதிவு செய்ய வலியுறுத்தப்படுகிறது

5. மாநில அளவில் இரண்டாவது மாநாடு கொடைக்கானல் அல்லது ஏற்காட்டில் நடைபெறுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முடிவில் மாநில நிர்வாகிகள் எடுக்க முடிவிற்கு மாவட்ட நிர்வாகி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

6.செய்தியாளர்களுக்காக விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு Rs 5 லட்சம் மதிப்பில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.