சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி 189-வது திமுக வட்டச் கழக செயலாளர், லயன் வ.பாபு ஏற்பாட்டில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் தலைமையில் பள்ளிக்கரணை விஜிபி ராஜேஷ் நகர், ஆகிய பகுதிகளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சார இயக்கத்தையும் திமுக உறுப்பினர் சேர்க்கையையும், திமுகவின் நான்காண்டு சாதனை பணிகளை மக்களிடம் எடுத்துக்கூறி உறுப்பினா் சேர்க்கையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த உறுப்பினர் சேர்க்கையில் வீடு வீடாக செல்லும் பொழுது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து குடும்பம் குடும்பமாக உறுப்பினர் சேர்க்கை இணைகிறார்கள். இந்த நிகழ்வில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ சட்டமன்ற தொகுதி அரவிந்த் ரமேஷ் கூறுகையில் நம் முதல்வர் செய்த சாதனைகளை அனைவரும் ஏற்றுக்கொண்டு. இந்த உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொள்கிறார்கள் என்று கூறினார்.