• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது – தேனியில் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

ByP.Thangapandi

Mar 31, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..,

நாராயணாசாமி செல்லும் இடமெல்லாம் அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது இப்போதே தேனி தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டோம் ஹாட்ரிக் சாதனையாக வெற்றி பெற உள்ளோம்.

தேனி மக்களவைத் தொகுதியில் முன்னாள் எம்.பி. பார்த்தீபன் வெற்றி பெற்றார், கடந்த தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் ஹாட்ரிக் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு சொல்கிறோம்.

ஏனென்றால் இன்று கூட பக்கம் பக்கமாக விளம்பரம் செய்துள்ளனர், அரசின் மீது உள்ள கோபத்தை திசை திருப்பும் வகையில் சாதனை என சொல்லி வேதனை தான் இன்று உள்ளது.

மின்சார கட்டணம், சொத்துவரி, பேருந்து கட்டணம் என அனைத்தையும் உயர்த்தியுள்ளனர்., சாதாரண மக்களால் எப்படி தாங்க முடியும்.

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குகிற மாநிலமாக தமிழ்நாட்டை இன்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்., 3 லட்சம் கோடி – க்கு மேல் இந்த 3 ஆண்டுகளில் வாங்கியுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் கிடைத்த அரிசி, மளிகை பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் இன்று கடுமையாக உயர்ந்துள்ளது., கேட்டால் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்கின்றனர்., ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு 10 ஆயிரம் ரூபாய்க்கு செலவு வைத்துள்ளனர்.

ஒவ்வொரு நிலையிலும் தமிழகம் சீரழிந்து உள்ளது அதை சீர்படுத்த எங்களது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்., எங்களது தேனி தொகுதி வேட்பாளருக்கு 7 மொழி தெரியும் தமிழகத்திலேயே 7 மொழி தெரிந்த ஒரே வேட்பாளர் நாராயணசாமி அவர்கள். போலிசார் டிடிவி தினகரனுக்கும் அனுமதி கொடுத்துவிட்டு எங்களுக்கும் போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர், அவருக்கு ஆங்காங்கே காத்து தான் வாங்குகிறது.

டிடிவி தினகரனை நம்பி போனவர்களின் நிலை குறித்து, முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் முதல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏ-க்களிடம், எங்களை எதிர்த்து நிற்கும் தங்கத்தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோரிடம் கேட்டால் தெரியும்.

நம்பியவர்களை நட்டாத்தில் விட்டவர் தான் டிடிவி தினகரன், நம்பியவர்களை நாடறிய செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

தேர்தல் நேரம் என்பதால் அவர் அவர் கட்சிக்காக, கட்சி வெற்றி பெற வந்து போவதை குறை சொல்ல முடியாது, என மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண காலங்களில் போனது போல தமிழ்நாட்டிற்கும் வந்திருந்தால், மக்கள் எதிர்பார்த்தார்கள் வருவார், ஏதாவது செய்வார் என எப்போது வேலை பழு கரணமாகவோ என்னவோ வரவில்லை.

அதனால் உதவியும் கிடைக்கவில்லை, அவர் வந்திருந்தால் ஒருவேலை நிவாரணம் கிடைத்திருக்கும், திமுகவினருக்கு அழுத்தம் கொடுக்க தெரியவில்லை, நாராயணசாமி-யை வெற்றி பெற வைத்தால் அவர் இந்தியில் பேசுவார், ஆங்கிலத்தில் பேசுவார், போராடி வாங்குவார் கெஞ்சி வாங்குவார் மக்களுக்கான திட்டங்களை வாங்குவதில் எங்கள் வேட்பாளர் வல்லவர் அதனால் எங்களுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.

38 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு பொம்மையாக தான் இருந்தனர், அதனான் தான் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவர்கள் மீது கோபபடுகின்றனர்.

எல்லோருடைய ரத்தத்திலும் தமிழ் ரத்தம் தான் ஓடுகிறது., மூதறிஞர்கள் என்ன சொல்கின்றனர் என்றால் கல் தோன்றி முன் தோன்றி மூத்த குடி தமிழ் குடி, தமிழ் குடிகளின் மூத்த மொழி தமிழ் மொழி அதன் வரலாறு பண்பாடு நாடறிந்த, உலகறிந்தது, அதனால் விவாதம் ஒன்றும் இல்லை மொழி திணிப்பை அதிமுக என்றும் ஏற்றுக் கொள்ளவில்லை., என பேட்டியளித்தார்.