தென் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
தென் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து இன்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருநெல்வேலி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை மாலை 6 மணி அளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை செல்கிறார்.