• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மரங்களை வெட்ட அனுமதி ரத்து…தமிழக அரசு ஷாக்…

Byகாயத்ரி

Nov 8, 2021

முல்லைப் பெரியாறில் உள்ள பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து. அதற்காக, பேபி அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்டித்தள்ளுவதற்கு கேரள வனத்துறையினர் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தனர். இதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.


அதைத் தொடர்ந்து இந்த அனுமதிக்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். ஆனால் இந்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையாக மாறி இருக்கிறது. கேரளாவின் கோரிக்கை என்பது முல்லைப் பெரியாறில் புதிய அணை வேண்டும் என்பதுதானே தவிர, பேபி அணையை பலப்படுத்துவது அல்ல என எதிர்க்கட்சிகள் பினராயி விஜயன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை வழங்கிய அனுமதியை மாநில அரசு ரத்து செய்துள்ளது. மேலும் இந்த அனுமதியை வழங்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இந்த உத்தரவு வழக்கத்துக்கு மாறான ஒன்று எனக்கூறியுள்ள கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், இந்த உத்தரவை பிறப்பித்த முதன்மை தலைமை வன பாதுகாப்பாளர் தரப்பில் கடுமையான குறைபாடு உள்ளது எனக்கூறினார். மேலும், பேபி அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்டித்தள்ளுவதற்கு அனுமதி அளித்தது பற்றி கேரள அரசுக்கு எதுவும் தெரியாது.

அப்படி ஒரு நிலைமை என்றால் அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரையில், இந்த முடிவு பற்றி முதலமைச்சர் அலுவலகத்துக்கோ, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அலுவலகத்துக்கோ அல்லது எனது அலுவலகத்துக்கோ எதுவும் தெரியாது. ஏதோ குளறுபடி நடந்துள்ளது. அவர்கள் மரங்களை வெட்டித்தள்ளத்தொடங்கி விட்டனர் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இது தொடர்பாக தொடர்புடைய அதிகாரிகளிடம் நாங்கள் அறிக்கை கேட்டுள்ளோம் எனவும் கூறினார்.