
தீபாவளிப் பண்டிகை நாளிலிருந்து தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகின்றது.
தற்போது பனிமூட்டமும் நிலவுவதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதாலும் நிலைமை படுமோசமாக காணப்படுகிறது.
இந்தியா கேட், பாரபுல்லா, விமான நிலையப் பகுதி, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. காற்றின் தரக்குறியீடு 432ஆக பதிவாகி உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக, இந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்கிறது அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று. இதனால் அரசு விரைவில் உரிய தீர்வு எடுக்கவேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
