• Mon. May 6th, 2024

நியாய விலை கடைகளில் எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி, தமிழக விவசாயிகள் கோரிக்கை பேரணி

ByNamakkal Anjaneyar

Mar 19, 2024

நியாய விலை கடைகளில் இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பதை ரத்து செய்து, தமிழ்நாட்டின் தேங்காய் எண்ணெய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகளில் இந்தோனேசியா. மலேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பதை ரத்து செய்து தமிழ்நாட்டின் தேங்காய் எண்ணெய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு வேலூர் ரோடு கரட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தத்தின் அருகில் பேரணி துவங்கியது. பேரணிக்கு முன்பாக விவசாயிகள் கோரிக்கையை ஆதரித்து பேசினார்கள். இந்த பேரணிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சட்ட விழிப்புணர்வு அணியை சேர்ந்த சதீஷ்குமார் மாநில செயலாளர் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மாநில ஒருங்கிணைப்பாளர் தினம் விவசாயிகள் இயக்கம் கருணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, கொடி அசைத்து துவக்கி வைத்தார். தமிழக விவசாயிகளிடம் தேங்காய் பருப்பு நிலக்கடலை கொள்முதல் செய்து அதில் கிடைக்கும் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மலேசியா, இந்தோனேசியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்த பாமாயிலை கொள்முதல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். கரட்டுப்பாளையத்திலிருந்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்த விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கள் மனுவை கொடுத்தனர். திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளில் இது போன்ற பேரணிகள் நடைபெற்றது. இன்று திருச்செங்கோட்டில் பேரணி நடைபெற்றுள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறும் போது.., தமிழக அரசு சுமார் 2 கோடி லிட்டர் பாமாயிலை மலேசியா இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து 100 ரூபாய்க்கு இறக்குமதி செய்து 30 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் வழங்குகிறார்கள். இந்த பாமாயில் நுகர்வு மக்களின் உடல் நலத்துக்கு கேடானது தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்து விவசாயிகளுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அவரது தேர்தல் அறிக்கையில் 66 ஆவது வாக்குறுதியாக தேங்காய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார். எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *