• Mon. May 6th, 2024

பழைய வாகனங்கள் விற்பதில் சிரமம், ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் சங்க தலைவர் பாஸ்கரன் ஆதங்கம்

ByNamakkal Anjaneyar

Mar 19, 2024

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பிரதான தொழிலில் ஒன்றாக விளங்கி வருவது பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் இங்கு உள்ள சேலம் சாலையில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தற்போது மத்திய அரசு மற்றும் தமிழக அரசு புதிதாக விதிக்கப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த படி இருசக்கர வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்கு ஓடிபி அனுப்புவதன் வாயிலாகவே இருசக்கர வாகனத்திற்கான அபராத தொகை செலுத்துவது, வாகனத்திற்கான இன்சூரன்ஸ் புதுப்பிப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வது H.P கேன்சல் செய்வது என அனைத்திற்கும் வாகன உரிமையாளரின் ஓடிபி தேவைப்படுவதால், பழைய வாகனங்களுக்கு கடன் கொடுத்த ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் உரிமையாளர்கள் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர். இதனை கண்டித்து இந்த சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என
குமாரபாளையத்தில் ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் சிரமம் ஏற்படுவதால், இன்று ஒரு நாள் குமாரபாளையம் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ்கள், இருசக்கர பழுது பார்க்கும் பட்டறைகள், புதிய வாகன விற்பனையகங்கள் என அனைத்தும் கடையடைப்பு செய்தும் மேலும் ஈரோடு அந்தியூர் பவானி திருச்செங்கோடு பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் தொழிலாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன பேரணியாக சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் RTO பூங்குழலியிடம் தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இது குறித்து குமாரபாளையம் ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் சங்க தலைவர் பாஸ்கரன் கூறியதாவது…,

குமாரபாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் நிறுவனங்கள் பழைய இருசக்கர வாகன விற்பனையை நம்பி பிழைத்து வருவதாகவும், தற்போது இருக்கும் புதிய சட்டத்தால் ஏற்கனவே கடன் பெற்றுள்ள பழைய வாகனங்கள் மற்றும் விற்பனைக்கு வந்துள்ள பழைய வாகனங்களை விற்பதில் சிரமம் ஏற்படுவதால் அதற்கு உரிய தீர்வு காண வேண்டுமெனவும், இந்த சட்டத்தால் கடந்த ஒரு மாத காலமாக சரியான வியாபாரம் இல்லாமல் பெயர் மாற்றம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் வாடிக்கையாளர்களிடம் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *