அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. ஆகவே அந்த ஜல்லிக்கட்டுக்கு அந்த தொகுதி மக்களின் சார்பாகவும் அமைச்சர் என்ற முறையில் எனது சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சரை அழைக்க உள்ளேன் என தமிழ்நாடு வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தனது சொந்த தொகுதியான மதுரை கிழக்கு தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
சின்னப்பட்டி கிராமத்தில் மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட பொழுது பொதுமக்கள் சின்னப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என கூறினார்கள்.
கோவிலுக்கு செல்வதற்கு நடைபாதை வழி வேண்டும் எனவும், ஆதிதிராவிடர்கள் குடியிருப்பதற்கு இலவச பட்டா வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தார்கள் அவர்கள் கேட்ட அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக செய்து கொடுக்க அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்தார்.
குறிப்பாக உடனடியாக இரண்டு நேரம் அரசு பேருந்து கிராமத்திற்கு வந்து செல்ல உடனடியாக உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி,
மதுரை மாவட்டத்தில் 372 அரசு பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாக கண்காணிப்பில் தெரியவந்திருக்கிறது.
மிகவும் சேதமடைந்துள்ள அரசு பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்கும் ஓரளவு சேதமடைந்துள்ள அரசுப் பள்ளி கட்டிடங்களை மராமத்து பார்ப்பதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.
ராஜேந்திர பாலாஜி வழக்கில் தேடப்பட்டு வருகிறார் என்ற கேள்விக்கு
குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும் எனவும்
பதிலளித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு,
உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் அதை நாங்கள் முதலமைச்சரிடம் தெரிவித்திருக்கிறோம்.
முதலமைச்சர் யார் பதவிக்கு தகுதியானவர்கள் என கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த பதவிகளை கொடுப்பார்.
வரவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது ஆகவே அந்த ஜல்லிக்கட்டுக்கு அந்த தொகுதி தொகுதி மக்களின் சார்பாகவும் அமைச்சர் என்ற முறையில் எனது சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சரை அழைக்க உள்ளேன்
என தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.