• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க..,கர்நாடக அரசுக்கு தமிழக தலைமைச்செயலாளர் கடிதம்..!

Byவிஷா

Apr 29, 2023

காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, தலைமைச் செயலாளர் இறையன்பு, கர்நாடக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் காவிரியில் கலக்கிறது என இறையன்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.