• Mon. Apr 28th, 2025

பல்வேறு கலாச்சார மக்களின் ஒட்டுமொத்த பார்வையையும் சென்னை நோக்கி திருப்பி விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவின் தென்னக மாநிலங்களின் தனித்த பெருமை மிகுந்த உயர்ந்த மனிதனாக தமிழக முதல்வர். இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு மொழி, பல்வேறு கலாச்சார மக்களின் ஒட்டுமொத்த பார்வையையும் சென்னை நோக்கி திருப்பி விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பு என்ற ஒரு விவாதத்தை முதலில் ஒன்றிய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உயர்த்திய 800_க்கும் அதிகமாக அமைந்துள்ள இருக்கைகளில் மர்மத்தை முதலில் உடைத்து. நாங்கள் தந்தை பெரியார், அண்ணா, கலைஞரிடம் அரசியல் கற்றவர்கள். நாக்பூரில் அரசியல் பாடம் கற்றவர்களை விட திறமையான அரசியல் கற்றவர்கள் என்பதை இந்தியாவின் 8 திசைகளிலும் எதிரொலிக்கிறது.
சென்னையில் முதல்வர் கூட்டியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க 7 முதல்வர்கள் மற்றும் 22_ அரசியல் கட்சிகளின் சார்பில், பங்கேற்றுள்ள தலைவர்களின் சங்கம ஆலோசனை கூட்டம்.

ஒன்றிய அரசிற்கு எதிரான தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ள இந்த தொலை நோக்கு பார்வைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பது போன்றே தொடரவேண்டும். இது சம்பந்தமாக ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வண்ணம். இது குறித்த அடுத்த ஆலோசனை கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று அறிவித்த முதல்வர் ரேவநத்ரெட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் வைத்த கோரிக்கை இந்த கூட்டமைப்பின் தலைமை இடத்தை டெல்லியில் உருவாக்க வேண்டும், அதற்கு தமிழக முதல்வரே தலைமை ஏற்கவேண்டும் என்ற கருத்தை நிகழ்வில் கூடியிருந்த அனைத்து முதல்வர்களும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கை ஒலி எழுப்பி ஆதரவு தெரிவித்ததே. முதல்வர் ஸ்டாலின் வீசிய விதைகள் ஆழ வேர்விட்டு வளரும் என்பதை உணர்த்தியது.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது தமிழர்களின் இரத்தத்தில் கலந்த இயல்பான உணர்வு என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நம் விருந்தினர்களை இன் முகத்துடன் வரவேற்று வழங்கிய பரிசுகளின் வரிசை சற்றே நீளமானதாக…

1) பத்தமடை பாய்
2)தோடர்களின் சால்வை
3) காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை
4) ஊட்டி வர்க்கி
5) கன்னியாகுமரி கிராம்பு
6) கோவில் பட்டி கடலை மிட்டாய்
7) ஈரோடு மஞ்சள்
8) கொடைக்கானல் பூண்டு.

திசைகள் எட்டு போல். சென்னையில் நடக்கும் ஒன்றிய அரசிற்கு எதிரான கருத்து பதிவு. இந்தியாவின் எட்டு திசைகளிலும் ஒலிக்க தொடங்கி விட்டது என்பதை சொல்லும் பரிசு பொருட்களின் எண்ணிக்கை.

தமிழகத்தின் தனி சிறப்பு வாய்ந்த பொருட்களை தமிழக மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்து, அழகியபெட்டியில் அடுக்கப்பட்டு தமிழகத்தின் பரிசாக விருந்தினர்களுக்கு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.