• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது

Byவிஷா

Apr 16, 2025

இன்று மாலை முதல்வர் தலைமையில் நடைபெறவிருக்கும் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய, பல்கலை துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான, 10 மசோதாக்களுக்கு, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்விஷயத்தில் கவர்னருக்கான அதிகாரத்தையும் மாநில அரசுக்கு மாற்றி உள்ளது.
இதையடுத்து, அனைத்து பல்கலை துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று மாலை முதல்வர் தலைமையில் நடக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, நாளை அமைச்சரவை கூடுகிறது.