• Thu. Apr 24th, 2025

ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் தானாக திறக்கும்கதவு!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த பங்குனி பொங்கல் விழாவில் ஆண்டுதோறும் அக்னி சட்டி திருவிழாவில் அன்று அதிகாலை வேளையில் அடைத்த கருவறை கதவு தானாக திறக்கும் அதிசய நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பங்குனி பொங்கல் திருவிழாவில் முக்கிய நிகழ்வான அம்மன் கருவறை கதவு தானாக திறக்கும் அதிசய நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கதவு சாத்தப்பட்டது.

பின்னர் கோவில் பூசாரி கருவறையை மூன்று முறை சுற்றி வந்து கருவறை வாசல் படியில் தேங்காய் உடைத்ததும் கதவு தானாக திறக்கும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆகோ அய்யாகோ கோசத்துடன் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர்.