• Thu. Sep 28th, 2023

தமிழ்நாட்டையும், கலைஞரையும் பிரித்து பார்க்கவே இயலாத சாதனைகள் படைத்தவர் கலைஞர்… தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..,

ByKalamegam Viswanathan

Aug 14, 2023

தமிழையும் கலைஞரையும், தமிழர்களையும் கலைஞரையும்,தமிழ்நாட்டையும் கலைஞரையும் பிரித்து பார்க்கவே இயலாத சாதனைகள் படைத்தவர் கலைஞர்:
தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு,

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை இராஜா முத்தையா மன்ற அரங்கத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்கள். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, பொன் வசந்த் , மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மண்டல தலைவர்கள் வாசுகி, புவனேஸ்வரி, முகேஷ் ஷர்மா, பாண்டிச்செல்வி சிறப்பு அழைப்பாளர்கள் பேராசிரியர்கள் கு.ஞானசம்பந்தன், ராஜா கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு , மாணவ, மாணவியர்களுக்கிடையே பேச்சு போட்டியை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதன் படி மிகச்சிறப்பாக இந்த பரிசளிப்பு விழா நடைபெற்று இருக்கிறது.


அதில் முக்கியமாக பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில், முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள் ஆற்றிய உரையை நாம் கேட்டோம். அவர்கள் இரண்டு உரைகளிலும் கருணாநிதி , பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் எந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டும் வண்ணம் இருந்தது.
கல்லூரி கல்வியை காணாத அவரிடம் சுயமாக இருந்த திறமைக்கு காரணம் அவர்தம் மொழிப்பற்று ஆகும். யாரெல்லாம் உளவியல் மற்றும் நுண்ணறிவு குறித்து உயர்கல்வியில் படிப்பீர்களோ அதில் முக்கியமாக சொல்வார்கள்.
மனித திறனில் இருப்பதிலேயே சிறந்த அம்சம் தொடர்புத்திறன் ஆகும். எழுதுவது, பேசுவது, கருத்துக்களை பரிமாறிக்கொள்வது என அதில் உள்ளடக்கம்.
அதில், பொது கூட்டங்களில் பலர் முன்னிலையில் பேசுவது என்பது பலருக்கு கடினமான ஒன்றாக இருக்கும். சிலருக்கு அது சிறப்பான ஒன்றாக இருக்கும். அதில் முதன்மையானவர் கருணாநிதி. அதனால் தான், இன்றைக்கு வரை எல்லோரும் கூறுவது போல தமிழையும் கலைஞரையும், தமிழர்களையும் கலைஞரையும், தமிழ்நாட்டையும் கலைஞரையும் பிரித்து பார்க்கவே இயலாத சாதனைகள் படைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் .
அவர் வழியில் வந்த கழகத்தில் ஆட்சியில் இருப்போர் எங்களை போன்றோர் இன்னும் ஒரு சிறப்பான குணத்தை கண்டுள்ளோம்.


எந்த அளவிற்கு பேசுவது எழுதுவது திறமையோ அதே அளவிற்கு கேட்டுக்கொள்வது தகவலை உள்வாங்கிக் கொள்வது ,அடுத்தவர்களிடம் தகவல் கண்டறிவது மிகப்பெரிய திறமை பொறுப்புகள் கூடுகிற போது வந்தடைந்த உண்மை தகவல்கள் குறைவாகி விடும். இது அரசியல் உள்ளிட்ட அத்தனை துறைகளுக்கும் பொருந்தும். ஆனால், தலைவர் கலைஞர் எந்த ஒரு நிகழ்வை பற்றியோ எந்த கருத்தை கேட்பார் என நமக்கே தெரியாது .அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் நான்கு மணிக்கெல்லாம் துறை செயலாளரிடம் பேசுவார்.முன்னாள் பத்திரிகை நிருபரிடம் பேசுவார். இப்படி கடைக்கோடி வரை உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அவர் இருந்த உயர்ந்த இடத்தில் இருந்தே தகவல்களை பெற்று விடுவார். இந்த திறமை கோடியில் ஒருவருக்கு தான் இருக்கும். அதேபோல் கூட்டம் நடத்தும் போது கூட கூட்டத்தில் உள்ள அனைத்து நபர்களின் கருத்தை எந்த ஒரு குறுக்கீடு இல்லாமல் உள்வாங்கிக்கொண்டு அதன் பிறகு தெளிவான முடிவை எடுப்பார் கருணாநிதி.
அத்தகைய உலகத்திலேயே சிறந்தவருக்கான நினைவை போற்றுகிற வகையில் போட்டிகள் இங்கே நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் கலந்து கொள்வதை எனக்கு பெருமையாக கருதுகிறேன்.தமிழ்நாட்டில் ஓரளவிற்கு கல்வித்திட்டம் சிறப்பாக இருந்தாலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருக்கிறது.அதே நேரத்தில் பல நிறுவனங்கள் அரசாங்கங்களிடம் கூறுவது எங்களுக்கு தேவையான திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதாக கூறுகிறார்கள்.இதற்கு காரணம் கல்வித்திட்டத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் உள்ள தொடர்பு இடைவெளி தான் காரணம்.அதை திருத்துவதற்காகவே தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், நான் முதல்வன் திட்டத்தை சிறப்பு திட்டமாக ஓராண்டுக்கு முன்பு தலைவர் கலைஞர் நினைவு நாளன்று தொடங்கி வைத்தார்கள். நான் முதல்வன் திட்டத்தினுடைய நோக்கம் அனைவரும் அவரவர் செயலுக்கு ஏற்ப முதல் இடத்தில் இருக்கும் அளவிற்கு விடா முயற்சியுடன் கூடுதல் கவனத்துடன் செயல்பட இலக்கை அடைவது முதல்வர் அவர்களின் விருப்பம் .அதற்கு தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் உதவி செய்கிறார்கள்.
எந்தெந்த திறன்களை, எந்தெந்த கலையை வழங்கினால் நல்ல வேலை உருவாவதற்கும், நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக விளங்கிடவும் வழியை நான் முதல்வன் திட்டம் காண்பிக்கும். கல்வியின் முக்கியத்துவம் நம்முடைய இனத்திற்கு,கலாச்சாரத்திற்கு முக்கியம்.
மன்னர்களுக்கு கூட அவர் ஆளுகின்ற நாட்டில் மட்டும் தான் மரியாதை. ஆனால், கற்றோருக்கு செல்லுகிற இடமெல்லாம் சிறப்பு என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகள் செயலாற்ற வேண்டும். அதற்கு நான் முதல்வன் திட்டம் உறுதுணையாக நிற்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *