• Tue. Oct 3rd, 2023

வாடிப்பட்டி யூனியனில் மராமத்து பார்க்க பள்ளி கட்டிடம் தேர்வு..,

ByKalamegam Viswanathan

Aug 14, 2023

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தனலெட்சுமி, கண்ணன், யூனியன் கமிஷனர்கள் ரத்தின கலாவதி, கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) அரிமீனாட்சி வரவேற்றார். கணக்காளர் சங்கர்,
தீர்மான அறிக்கை வாசித்தார். இந்தகூட்டத்தில், பொதுநிதியிலிருந்து பல்வேறு வளர்ச்சிப் பணித்திட்டங்கள் செயல்படுத்துவது பற்றியும், மராமத்து பணிக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான பள்ளிக்கூடக் கட்டிடங்கள் தேர்வு செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், ஒன்றியக்குழு
உறுப்பினர்கள், துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், கள
மேற்பார்வையாளர்கள், வேளாண்மைதுறை, தோட்டக் கலைத்துறை, மகளிர்
சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறுதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில், துணை வட்டாரவளர்ச்சிஅலுவலர் (ஊரட்சிகள்)உமா நன்றிகூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *