• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

ByP.Kavitha Kumar

Mar 15, 2025

தமிழ்நாடு சட்டசபையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்ய உள்ளார்.

2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் புதிய அறிவிப்புகளை பட்டியலிட்டார். இந்நிலையில், 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த கூட்டத் தொடர் 17-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம் பெறும். தொடர்ந்து, 24-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.