தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு சென்னையில் ஏப்ரல் 19, 20 என இரண்டு நாட்கள் நடைபெற்றது
இந்த நிகழ்வில் தென்னிந்திய சினிமாவின் பிரபலங்கள் பங்கேற்று பேசினார்கள்.
நிகழ்வில் பங்கேற்ற நடிகர் கார்த்தி சிவக்குமார் தமிழ் சினிமாவின் தொடக்ககாலம் முதல் தொழில்நுட்ப ரீதியாக மாற்றம் கண்டுவரும் தென்னிந்திய சினிமா சர்வதேச சினிமா பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை பற்றி பேசியுள்ளார். நிகழ்வில் கார்த்தி சிவக்குமார் பேசியதாவது…..
“தமிழகம் வரலாறு ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலக்கியம், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களின் மையமாக இருந்து வருகிறது. சென்னையின் கரைகளை சினிமா எப்போது தொட்டதோ, அப்போதிலிருந்தே மேடை நாடகத்தின் உச்ச நட்சத்திரங்களான பி.யு.சின்னப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.ஜி.கிட்டப்பா மற்றும் அவரது மனைவி கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்டோரை உடனடியாக தன்பால் ஈர்த்துக் கொண்டது.
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அதன் கதைகள் பெரும்பாலும் நமது புராணம் மற்றும் கற்பனைக் கதைகளை ஒட்டியே இருந்தது. முதல் பல வருடங்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் 68 மேடை நாடகங்களிலிருந்தே, தமிழில் உருவான சினிமாக்களின் கதைகள் இருந்தன. ஆரம்ப நாட்களில் மொழி எல்லைகளைத் தாண்டி பேசப்பட்ட முதல் தமிழ், மற்றும் இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டஎஸ்.எஸ்.வாசனின் பிரம்மாண்ட படைப்பான சந்திரலேகா. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படத்தில் அறிமுகமானவைஜெயந்தி மாலா மொழி கடந்து பிரபலமான நட்சத்திர நடிகையானார்.
அப்போதே எல்லைகளைக் கடந்து புது ரசிகர்களை நோக்கி திரை நட்சத்திரங்கள் சென்று கொண்டிருந்தனர்.
இன்று வரை தமிழ் படைப்புகள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, மொழி மாற்றம் செய்யப்பட்டு, அதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும், அதன் அழகியலையும் மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
தமிழ் சினிமா எப்போதுமே நம் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. அது எப்போதும் பொழுதுபோக்கிற்காக என்கிற வட்டத்திற்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாமல், சமூக பிரச்சனைகளையும் பேசியுள்ளது. உதாரணமாக
கே. பாலச்சந்தர், ருத்ரய்யா மற்றும் பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் நம் சமூகத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து தங்கள் திரைப்படங்களில் பதிவு செய்துள்ளனர். வெள்ளித்திரையில் சுதந்திரமான மற்றும் துணிச்சலான இளம் பெண்களை அவர்கள் சித்தரித்த விதம் இன்றளவும் பொருத்தமாக உள்ளதுதமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறை மாற்றமடைந்து, வளர்ச்சியடைந்து, இன்னும் பண்பட்டு வருகிறது. நுணுக்கமான களங்கள், வழக்கமான பாதையில் பயணிக்காத திரைக்கதைகள், சமூகத்தின் விதிகளுக்கு சவால் விடும் பாங்கு ஆகியவற்றை கையாள எங்கள் படைப்பாளிகள் என்றும் அச்சப்பட்டதில்லை. அதிக தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் என்று பேச ஆரம்பிக்கும் போதே பரியேறும் பெருமாள், சூரரைப் போற்று, விசாரணை மற்றும் ஜெய் பீம் போன்ற சில பெயர்கள் என் நினைவில் தோன்றுகின்றன. இந்தப் படங்கள் நமது சட்ட திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் படங்கள் வந்த பிறகு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
பொன்னியின் செல்வன் போன்ற கனவுத் திட்டங்களைச் செயல்படுத்தி, உலகளாவிய பார்வையாளர்களிடம் நமது திரைப்படங்கள் சென்றடைய ஓடிடி வழிவகை செய்துள்ளது. மேலும் இந்த உலகுக்கு எடுத்துச் சொல்ல நமது பாரம்பரியத்தில் இன்னும் எண்ணற்ற கதைகள் உள்ளன. எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தை நான் என் குழந்தைகளுடன் பார்த்தேன். ஊட்டியிலிருந்து ஒரு கதை உலகம் முழுவதும் சென்றுள்ளது என்பதை நினைத்து ஆனந்தப்பட்டேன். கார்த்திகிக்கு நன்றி. பிரேம் ரக்ஷித் சார், எங்கள் கால்களை உடைத்தது பத்தாது என்று வெளிநாட்டவரின் காலையும் உடைக்கும் அளவுக்கு அனைவரையும் அந்த நாட்டு நாட்டு நடனத்தை ஆட வைத்துவிட்டார். அதற்கும் நன்றி” என்றார்.
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]