

மாநாடு படத்தையடுத்து அசோக் செல்வன் நடிப்பில் மன்மதலீலை என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு, அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் படம் ஒன்றை தமிழ், தெலுங்கில் இயக்கப் போகிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடித்த பிறகு நாகசைதன்யாவுடன் 2014 ல் தெலுங்கில் ஒக்க லைலா கோசம் என்ற படத்தில்தான் பூஜா ஹெக்டே அறிமுகமானார். இப்போது மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, பிரபாஸுடன் ராதேஷ்யாம் போன்ற படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார்.