• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கேஜிஎஃப் இயக்குநர் விரும்பும் டேக் டைவர்ஷன்

ஆர்வமும், திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் தயாராகியுள்ள படம் “டேக் டைவர்ஷன்”சிவானி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவரும், கூத்துப் பட்டறையில் பத்தாண்டுகள்  நடிப்புப் பயிற்சி பெற்றவருமான சிவகுமார் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

பேட்ட,  சதுரங்கவேட்டைஆகிய படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். ஜான் விஜய் வில்லனாக வருகிறார்.
ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இசை:ஜோஸ் பிராங்க்ளின். எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் சிவானி செந்தில்.
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம்.
திருமலை தென்குமரிமுதல் ‘பையா’ படம் வரையிலும் பயண வழிக் கதைகளைக் கொண்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தப் படமும் இணையும் என்கிறார் இயக்குநர்
டேக் டைவர்ஷன்படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த கே.ஜி.எஃப். இயக்குநர் பிரசாந்த் நீல் படக் குழுவினரை பாராட்டியும் வாழ்த்தியுள்ளார்.  டேக் டைவர்ஷன்  படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று இருக்கும் நடிகர் சிவா என்கிற நடிகர் சிவக்குமார் கே.ஜி.எஃப்படக் குழுவினரிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றுள்ளார். ‘கே.ஜி.எஃப்.’ படத்தில் நிறைய தமிழ் நடிகர்களும், தமிழ் பேசும் தொழில் நுட்பக் கலைஞர்களும் பணியாற்ற வேண்டியிருந்தது.இந்நிலையில்  சிவாவைப் பிடித்துப்போய் அவருக்கு ‘கே.ஜி.எப்.’ படத்தின்  இரண்டாம் பாகத்தில்.