• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி த.வெ.க ஆர்ப்பாட்டம்..,

ByPrabhu Sekar

Apr 4, 2025

வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தாம்பரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் வகுப்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் தலைமை அறிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக வெற்றி கழக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் தலைமையில் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் சண்முக சாலை பாரதி திடல் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கில்லி சரத்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தவெக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.