

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா இன்றைக்கு மத்திய அரசு சார்பில் மக்களவை மாநிலங்களவை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசால் சட்டமாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் சார்பில் 1000க்கும் மேற்பட்டோர் தாம்பரம் சண்முகம் சாலையில் வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஜமாத் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தாம்பரம் வட்டார முஸ்லிம் ஜமாத்தினர் மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

