• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நிரவி – திருப்பட்டினம் தொகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கி வைத்த டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 10, 2026

காரைக்கால் மாவட்டம் நிரவி – திருப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூதுபோன்மூலை பகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் ஹிட்டாச்சி வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மழைக்காலங்களில் நீர் தேக்கம் ஏற்படாமல் தடுக்கவும், விவசாய நிலங்களுக்கு சீரான நீர்வரத்தை உறுதி செய்யவும் இந்த தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணிகளை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், வாய்க்கால்களை முறையாக பராமரிப்பதன் மூலம் வெள்ளப் பாதிப்புகளை குறைத்து, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.