

ஸ்வாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் மரணமடைந்த வழக்கில் அதிகாரிகள் ஆஜராகினர். மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகினர். ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் 2016ஆம் ஆண்டு புழல் சிறையில் உயிரிழந்தார். சிறையில் மின்சாரம் தாக்கி ராம்குமார் உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கை மனித உரிமை ஆணையம் விசாரிக்கிறது.

சென்னையை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரை ஒருதலைப்பட்சமாக காதலித்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அப்போது 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் மின் ஒயரை கடித்து தற்கொலை செய்துக் கொண்டார். ராம்குமார் மரணம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் புழல் சிறை அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ராம்குமார் மரண வழக்கு குறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் 2வது முறையாக விசாரணை நடைபெறுகிறது. சென்னையில் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜரான 3 சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது. புழல் சிறை கண்காணிப்பாளர் அன்பழகன், ஜெயிலர் ஜெயராமன், சிறைக்காவலர் பேச்சிமுத்துவிடம் விசாரணை நடைபெறுகிறது. ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் கடந்த 2016ஆம் ஆண்டில் புழல் சிறையில் உயிரிழந்தார்.
