• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா..,

ByAnandakumar

Aug 9, 2025

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இன்று இரவு ஆலயத்தில் இருந்து சுவாமி கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சவுந்தரனாயகி உடன் மேள தாளங்கள் மற்றும் கேரளா வாத்தியங்கள் தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு திருவீதி விழா சிறப்பாக நடைபெற்றது.

சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத திருக்கல்யாண திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூவூர் மகா அபிஷேக குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.