• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சுவாமி நடராஜர் ஊர்வலம்

Byp Kumar

Jan 7, 2023

திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டுசிதம்பரம் நடராஜர் ஆலயம் திரு உத்திரகோசமங்கை மரகத நடராஜர் ஆலயம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து நடராஜர் ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் கடைபிடிக்கப்பட்டது.


அதன் ஒரு பகுதியாக மதுரை அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள பழமையான நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சுவாமி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு விசேஷ அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுவாமி நடராஜரும் பின்பு சிவகாமி அம்மனும் முக்கிய வீதி வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
இதில் வழி நெடுகிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஓம் நமசிவாய கோஷம் முழங்க நடராஜரை தரிசனம் செய்தனர்