

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் பரப்புரைக்குச் சென்ற போது பாஜக தொண்டர்கள் சங்கு ஊதி வரவேற்றது, அங்;கு கூடியிருந்த மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மக்களவை தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பாஜக நட்சத்திர வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தொகுதியில் அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் கோடம்பாக்கத்தில் பரப்புரைக்கு சென்ற தமிழிசையை பாஜக பெண் தொண்டர்கள் சிலர் சங்கு ஊதி வரவேற்றனர்.
தேர்தலுக்கு முன்பே பாஜகவினருக்கு ரிசல்ட் தெரிந்துவிட்டதா என எதிர்க்கட்சியினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.

