• Tue. Mar 25th, 2025

தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த ராதிகா

Byவிஷா

Mar 28, 2024

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாசரத்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அங்கு மக்கள் கூட்டம் இல்லாததால், தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு கோபமாக கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா போட்டியிடுகின்றார். அவரை வேட்பாளராக நிறுத்தியதில் பாஜக கட்சியில் இருக்கும் பலரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் எதிரொளியாக ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் விருதுநகரில் பிரசாதத்திற்கு சென்ற இடத்தில் கூட்டம் இல்லாததை கண்டு டென்ஷனான நடிகை ராதிகா பரப்புரையை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.