ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஏராளமான நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் இறுதியில் ஓரிரு காட்சிகளில் மட்டும் நடிகர் சூர்யாவும் அவர் தம்பி கார்த்தியும் நடித்திருக்கிறார்களாம்.
கதைப்படி அவர்கள் வருவது முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்பதால் இந்தத் தகவலை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.