அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வருபவர் ஷிப்லி பராஸ்.
நேற்று முன்தினம் மாலை இவர், கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள கோட் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம கும்பல் ஒன்று திடீரென அவருடைய காரை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.இதில் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் ஷிப்லி பராஸ் காயங்கள் ஏதும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது கார் டிரைவர் படுகாயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.