• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நீலகிரி ஆட்சியரைப் பணியிடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

Byமதி

Nov 16, 2021

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

2017ஆம் ஆண்டிருந்து நீலகிரி ஆட்சியராக பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்யும் சூழல் நிலவியது.ஆனால் அவரை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனவே தமிழக அரசு நிர்வாகரீதியாக மாற்றங்களை செய்ய அனுமதி வேண்டும் என இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்ய அனுமதி அளித்திருக்கிறது.