அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகள், நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள், சித்திரை மற்றும் ஆவணி மூல வீதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள், மீனாட்சி அம்மன் கோவில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம்,

தீயணைப்பு நிலையம், கழிப்பறை வசதிகள், காலணி பாதுகாப்பு மையங்கள், பெரியார் பேருந்து நிலையம் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் எல்லீஸ் நகர் வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.









