• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

1 அடியில் அழகிய விநாயகர் சிலை: புதுக்கோட்டை 3-ம் வகுப்பு மாணவன் ஆலன் ரிஷித் அசத்தல்!

ByS. SRIDHAR

Sep 16, 2026

​புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் (Photo Grapher) அருண் அவர்களின் மகன் L.ஆலன் ரிஷித் (வயது 8). இவர் அங்குள்ள பிரபல மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் (Mount Zion International School) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவன் ஆலன் ரிஷித், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில், தனது சொந்த முயற்சியில் வண்ணக் களிமண்ணைக் கொண்டு 1 அடி உயரத்தில் மிக அழகிய விநாயகர் சிலையைச் செய்து அசத்தியுள்ளார்.

யார் உதவியும் இன்றி, முற்றிலும் தனி ஒரு ஆளாகவே இந்த அழகான விநாயகர் சிலையை வடிவமைத்துக் காட்டியுள்ளார். சிறுவனின் இந்தத் தனித்துவமான கலைத்திறனையும் படைப்பாற்றலையும் கண்டு பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.