• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் கடந்த 24 நேரத்தில்9 படுகொலை! -ஆ.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Sep 16, 2026

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 9 படுகொலை நடைபெற்றுள்ளது. சென்னையில் விநாயகர் ஊர்வலத்தின் போது அரசு பேருந்து ஓட்டுனர் படுகொலை செய்யப்படுகிறார் ‌.மதுரை அருகே வாலிபரை காரில் கடத்திக்கொண்டு தண்ணீர் தொட்டியில் வீசி உள்ளார்கள். ராமநாதபுரம் கருவேலம் காட்டில் இரண்டு பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர் மேலும் செங்கல்பட்டு திண்டுக்கல் மாவட்டங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். செங்கல்பட்டு வாலாஜாபாத்தில் மட்டும் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

சமீபத்தில் அதிகமாக நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் தான் காரணம் என குற்றம் சாட்டு உள்ளது .ஒரே நாளில் 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் லண்டனில் தொழில் முதலீட்டை ஈர்க்க சென்று உளளார். தற்போது தொடர் படுகொலை நடப்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளார்கள் இவர்களுக்கு தவெக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

சட்டசபை கூட்டத் தொடரில் காவல்துறை மானிய கோரிக்கையில் குற்ற சம்பவங்களுக்கு அரசு காரணம் என நாம் கருதி விட முடியாது, தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு குற்ற சம்பவங்களுக்கு அதிகரித்ததற்கு விளக்கத்தை அளித்தார் முதல்வர் .

தற்போது மக்கள் எடுத்துள்ள கேள்வி அனைவரும் கவனத்திலும் எடுத்து வைக்கப்படுகிறது .தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு கடுமையாக விமர்சித்து கொலை, கொள்ளை சம்பவங்கள், பாலியல் பிரச்சனைகள் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஸ்டாலின் சார் உங்களுக்கு ஆட்சி எதற்கு?அதிகாரம் எதற்கு ?முதலமைச்சர் பதவி எதற்கு? என்றெல்லாம் கடுமையாக விஜய் முன்வைத்தார் .

இப்போது மக்கள் உங்கள் மீது கேட்கிற கேள்வி என்னவென்றால்,உங்கள் மீது உறுதியான நம்பிக்கை வைத்து தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து உங்களை முதலமைச்சராக அமர்த்தினோம். இந்த 120 நாட்களில் தவெக ஆட்சியில் கட்டுக்கடங்காமல் நடைபெற்று வருகிற குற்ற சம்பவங்கள் கண்ணை கட்டுவதாக இருக்கிறது. தலை கிறுகிறவென சுற்றுகிறது அனைவரும் அதிர்ச்சியில் குறைந்து போய் உள்ளார்கள்.

மக்கள் கேள்வி கேட்பது ஒன்றுதான் முதல்வர் அவர்களே தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் முன்வைத்த விமர்சனம் ஆட்சி எதற்கு ,அதிகாரம் எதற்கு முதலமைச்சர் பதவி எதற்கு என்று நீங்கள் முன்வைத்த உங்களுடைய விமர்சனம் தற்போது தவெக அரசின் நடைபெற்று குற்ற சம்பவங்களுக்கு உங்களுக்கு விமர்சனம் பொருந்துமா ?

விஜய்க்கு பதவியை எதற்கு? ஆட்சி எதற்கு ?அதிகாரம் எதற்கு? உங்கள் விமர்சனத்தை உங்களுக்கு பொருந்துமா என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது .

இதற்கு முதல்வர் பொறுப்பேற்பாரா அல்லது எப்போதும் போல டேக் டைவர்ஷன் என்று திசை திருப்புகிற, மடைமாற்றம் செய்கிற அரசியலை மிக சிறப்பாக செய்து முதல்வர் விஜய், இந்த குற்ற சம்பவங்களை தடுப்பதிலும், டேக் டைவர்ஷன் என்று திசை திருப்பவும் நடவடிக்கைகள தான் அக்கறை செலுத்துவார பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.