• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

வாகன விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு காசோலை வழங்கிய கண்காணிப்பாளர்..,

Byமுகமதி

Feb 5, 2026

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் உட்கோட்டத்தில் பணி புரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் , முத்துக்குமார் அவர்கள் கடந்த 01.08.2025-ம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார்.

அவரது இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது காவல்துறைக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். குறிப்பாக அவருடைய பணி சார்ந்து மட்டுமல்லாது நட்பு வட்டாரத்திலும் நற்பெயரைப் பெற்றிருந்த காரணத்தால் அவரது இழப்பை தங்களுக்கு ஏற்பட்ட பெரும் துயரமாக அந்த நேரத்தில் அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அவருடைய குடும்பத்தினருக்கு, அவருடன் பணிபுரிந்து வந்த தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் 1997வது 2nd Batch காவல் ஆநர்கள் 2623 பேர் ஒன்று சேர்ந்து தங்களால் இயன்ற ரூபாய் 13,30,000/- க்கான குடும்ப நலநிதியை திரட்டி, அதற்கான -காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அபிஷேக் குப்தா அவர்களின் முன்னிலையில் அவர் கையால் குடும்பத்தினருக்கு தங்களது உதவியாக வழங்கினர்.