• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பாலா – சூர்யா இணையும் படத்தின் சூப்பர் அப்டேட்

Byமதி

Nov 22, 2021

சூரியா நடித்த ஜெய் பீம் பட சார்ச்சை ஒரு புறம் இருந்தாலும், தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

பாலா இயக்கும் படத்தை சூர்யா தயாரித்து நடிக்க உள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதில் ஒரு கதாபாத்திரத்தில் வேறு நடிகரை நடிக்க வைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும் குறைந்த காட்சிகளே என்பதால் சூர்யாவை நடிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒரு படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.