ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘அஜித் 61’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அஜித், போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அஜித்தின் 60 வது படமும் அதே கூட்டணியில் அமைந்தது. அந்தவகையில் ‘வலிமை’ பொங்கலையொட்டி வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகிறது
இந்த நிலையில் இக்கூட்டணி மீண்டும் ‘அஜித் 61’ படத்தில் இணையவுள்ளது. இதனை, போனி கபூர் சமீபத்திய பேட்டியில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், ’அஜித் 61’படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இதற்கு முன்பு அஜித்தின் வேதாளம், விவேகம் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.