

2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்
கொடைக்கானலில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மலர் கண்காட்சி உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்தது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதால் கோடைவிழாவுக்கு அனுமதி கிடைத்தது .இதனையடுத்து கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று 59-வது மலர் கண்காட்சி துவங்கி உள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த வருடம் 13 ஆடி உயரம் கொண்ட திருவள்ளுவர் உருவம், புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு, சிங்சாங், ஸ்பைடர் மேன், 20 அடி நீளம் கொண்ட டைனோசர்,மயில் உள்ளிட்ட உருவங்களை மலர்களை கொண்டு அலங்கரித்துள்ளனர்.
இவ்விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர், உணவு துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர், சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .ஜூன் 2 வரை நடக்கும் கோடை விழாவில் நாய் கண்காட்சி, படகு அலங்கார போட்டிகள் நடைபெற்று வருகிறது.