• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுகியன்

தேவையானவை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – கால் கிலோ, வெல்லம் – 200 கிராம், கடலைப் பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – சிறிதளவு, மைதா மாவு – ஒரு கப், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவை யான அளவு.
செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். கடலைப்பருப்பை வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேக விடவும். வெந்தபருப்புடன், தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து கெட்டியாக அரைத்து, சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் மசித்து சேர்த்துக் கிளறினால் பூரணம் ரெடி. இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவை கேசரி பவுடருடன் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் இந்த உருண்டைகளை தோய்த்து, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.