

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா நேற்று அதிகாரபூர்வமாக ட்விட்டரில் இணைந்துள்ளார். அவர் தனது முதல் ட்வீட்டில் இது எனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம், அவ்வளவுதான்! என்று தெரிவித்துள்ளார்
மேலும் சுதா கொஙக்ரா ட்விட்டரில் இணைந்த முதல் நாளில் அவருடைய பக்கத்தில் 28 ஆயிரத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் கிடைத்து உள்ளனர் என்பதும் இதனை அடுத்து அவருக்கு புளூடிக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது ட்விட்டரில் சுதா கொங்கரா தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


