

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமம் மணிமுக்தாற்றில் மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது நேற்று பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் அளவு திடிரென அதிகரித்தது.எதிர்பாராத விதமாக திடீர் நீர் பெருக்கால் பொதுமக்கள் மற்றும் ஐயர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.வேப்பூர் காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தென்எழிலன் உள்ளிட்ட போலீசார் விரைவாக செயல்பட்டு பொதுமக்களை பத்திரமாக கரையேற்றினர். சாதுரியமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்றிய காவல் துறையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர் .

