• Thu. Mar 27th, 2025

வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை

ByArul Krishnan

Mar 11, 2025

திட்டக்குடி, வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது

இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வேப்பூர்,பெண்ணாடம்,சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பகலில் வெயில் தாக்கமும் இரவில் பனி பொழியும் அதிகமா இருந்து வந்த நிலையில் வெப்ப காற்று வீசி வந்த நிலையில் காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மதியத்துக்கு மேல் வேப்பூர்,அடரி ,சிறுபாக்கம் , ஆவட்டி, திட்டக்குடி , ஆவினங்குடி பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான காற்று வீசி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.