• Thu. Apr 24th, 2025

விருதுநகரில் திடீர் தீ விபத்து.., வீடுகள் எரிந்து நாசம்…

ByK Kaliraj

Apr 2, 2025

விருதுநகரில் திடீர் ஏற்பட்ட தீ விபத்தால் 20க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமானது. விருதுநகர் மேலத்தெரு குடியிருப்புகளில் இன்று அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயனைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் அப்பகுதியில் அடுத்தடுத்து இருந்த தகர செட்டுடன் கூடிய குடிசை வீடுகள் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்டவுடன் குடியிருப்புகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ராஜா என்பவரது வீட்டில் சிலிண்டர் எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த வீடுகளில் தீ பரவியது தெரிய வந்துள்ளது. தீ விபத்தினால் தகர செட்டு வீடுகள் முற்றிலுமாக இடிந்து சேதமடைந்தன. தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

சம்பவ இடத்திற்கு விரைந்த விருதுநகர் போலீசார்,நகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த் துறையினர் தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விபத்தை தடுக்கும் வகையில் அப்பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து மீட்டுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.