• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வாரிசு படப்பிடிப்பு காட்சிகள் லீக் .. விஜய் டென்சன்

ByA.Tamilselvan

Oct 26, 2022

வாரிசு படத்தின் காட்சிகள் தொடர்ந்து லீக்காகி வருவதால் விஜய் டென்சனாகி பவுன்சர் டீமை மாற்றிசெல்லி விட்டாராம்.
தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இன்னும் சில காட்சிகள் எடுக்கவேண்டிய நிலையில் விஜய் ஓய்விற்காக துபாய் சென்றுள்ளார்.
வாரிசு திரைப்பட காட்சிகள் தொடர்ந்து இணையதளத்தில் வெளியாகி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் இத்திரைப்படத்தின் காட்சிகள், அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இதனையடுத்து, அவரது மகன் தனது ட்விட்டர் பக்கத்தில், இது போன்ற காட்சிகள் வெளியிட்டு இணையதளத்தில் பகிர்ந்து வருவது மிகவும் மன வேதனை அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், மீண்டும் வாரிசு திரைப்படத்தின் பாடல் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் விஜய் கோபமாகி எல்லோரையும் திட்டினாராம்.தற்போது அதை தொடர்ந்து விஜய் வாரிசு படபிடிப்பில் இருந்த பவுன்சர் டீமையே மாற்ற சொல்லிவிட்டாராம். அவர்கள் சரியாக பார்த்திருக்க வேண்டும், யார் கையில் மொபைல் இருக்கிறது என்று, அதை தவற விட்டுள்ளனர். அதனால், அந்த டீம் வேண்டாம், புது டீமை போடுங்கள் என சில நாட்களுக்கு முன்பு சொன்னாராம்.