• Wed. Jul 29th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மீண்டும் சிக்கலில் வாரிசு திரைப்படம்

ByA.Tamilselvan

Dec 7, 2022

பொங்கலுக்கு வெளியாகும் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியிடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் “தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே வினியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்” என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருந்தது.
இதனால் விஜயின் வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கடுமையாக பாதிக்கப்படும் .ஆனால் தயாரிப்பாளர் தில்ராஜூ பிரச்சனை வராது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என விநியோகஸ்தர்கள் அமைப்பு கடிதம் எழுதியுள்ளனர். இதனால் விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.