

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மூத்த வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “வரும் காலத்தில் நாம் கொரோனா வைரசின் பல்வேறு அலைகளை அடுத்தடுத்து எதிர்கொள்ள நேரிடும். இந்த வைரஸ் காற்றில் பரவும் திறனைக் கொண்டிருப்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த கொரோனா வைரசுடன் இணைந்து வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.
இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் வரும் காலங்களில் நாம் பல உருமாறிய கொரோனா வகைகளைப் பார்ப்போம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நாடு இப்போது சிறப்பான முறையில் தயாராக உள்ளது.
கொரோனா பரிசோதனை, சிகிச்சை முறை, தடுப்பூசி குறித்துப் புரிந்து கொள்ள நம்மிடம் இப்போது ஏராளமான கருவிகள் உள்ளன.
மக்கள் கொரோனா வைரசுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நல்வாய்ப்பாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமானதாக இல்லை. குழந்தைகள் மத்தியில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.
இதனால் நாம் குழந்தைகளைத் தைரியமாகப் பள்ளிக்கு அனுப்பலாம். இந்தியாவில் வரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நாட்டில் எந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு எடுக்க போதுமான தரவுகள் இல்லை. இது தொடர்பான தரவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
