• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

4G சேவையை விரிவாக்கும் படி சு.வெங்கடேசன் எம்.பி. ஆலோசனை

Byகுமார்

Aug 30, 2022

மதுரையைப் போல் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திற்கு 4G சேவையை விரிவாக்கும் படிதொலை தொடர்பு ஆலோசனை குழு கூட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி ஆலோசனை.
மதுரை தொலை தொடர்பு ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டம் சு. வெங்கடேசன் , பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. , மதுரை பி.எஸ்.என்.எல் மாவட்ட பொது மேலாளர் வேணுகோபால் ரியாலி இணை தலைவர் முன்னிலையில் , 2022-2024 – ம் ஆண்டிற்கான முதல் ஆலோசனை குழு கூட்டம் எல்லீஸ் நகர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் ரோஸ்லின் ராஜகுமாரி . துணை பொது மேலாளர் . பி எஸ் என் எல் வரவேற்புரை நிகழ்த்தினார் இக்கூட்டத்தில் தொலை தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர்களின் குறைகள் கண்டறியப்பட்டு அதனை நிவர்த்தி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுப்பதைப் பற்றி விவாதிக்கப்பட்டது.மற்றும் 4G saturation Project- ல் 35 sites கண்டறியப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதை பி.எஸ்.என்.எல் மாவட்ட பொது மேலாளர் அறிவித்தார் . மேலும் சு.வெங்கடேசன் எம்.பி மதுரையைப் போல் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திற்கு 4G சேவையை விரிவாக்கும் படி மதுரை BSNL- க்கு ஆலோசனை வழங்கினார் . மோகன் தாஸ் , துணை பொது மேலாளர் . பி.எஸ்.என்.எல் நன்றியுரை வழங்கி நாட்டுப்பண்ணுடன் கூட்டம் நிறைவுற்றது.