


ஜி.கே.மூப்பனாரின் 21ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்
மறைந்த த.மா.கா. நிறுவன தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 21-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மூப்பனார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், ஐ.ஜே.கே. கட்சி செயல்தலைவர் ரவி பச்சமுத்து, சேம.நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

