• Fri. Mar 29th, 2024

சமையல் எண்ணெய் கையிருப்பு குறித்து இன்று ஆய்வு

Byமதி

Oct 25, 2021

பண்டிகை காலம் என்பதால், பொது மக்களுக்கு சிரமம் இன்றி சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் கிடைப்பதற்கும், விலைகளை கட்டுக்குள் வைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை நிலவரங்களையும், உள்நாட்டு வினியோக நிலவரங்களையும் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை கண்காணித்து வருகிறது.

அந்தந்த மாநிலங்களின் தேவையின் அடிப்படையில் கையிருப்பு வரையறையை மாநிலங்களே முடிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை 2 முறை குறைத்தது.

இந்த நிலையில் சமையல் எண்ணெய் தடையின்றி கிடைப்பதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மாநிலங்களில் உள்ள கையிருப்பு குறித்து மத்திய அரசுகளுடன் இன்று காணொலி மூலம் ஆய்வு நடத்துகிறது மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *