

சேலம் மாவட்டத்தில் நிறைய திட்டபணிகளில் சுணக்கம் உள்ளது என்பதை நான் அறிவேன் அதனையும் விரைவுபடுத்தி முடிப்பதற்காக நேரில் வருகை தந்துள்ளதாகவும் கூறினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு அதிகாரிகளிடம் பேசியது, சேலம் மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகளை சரியாக நடைபெறுகிறதா? ஏதாவது தொய்வு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். அதை சேலம் மாவட்டத்தில் பின்பற்றி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் நகராட்சி பகுதிகளில் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் தமிழக முதல்வர் அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி சட்டமாகியுள்ளார்.இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நிறைய திட்டபணிகளில் சுணக்கம் உள்ளது என்பதை நான் அறிவேன் அதனையும் விரைவுபடுத்தி முடிப்பதற்காக நேரில் வருகை தந்துள்ளதாக கூறினார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்,ஆர் பார்த்திபன், சின்ராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
